Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான ATM கார்டு மூலம் பண மோசடி……. உஷாரான கூலி தொழிலாளி……. 3 பேர் கைது…!!

சேலத்தில்   கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம்  மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு  பணம் வரவில்லை என்று கூறி ஒரிஜினல் atm கார்டு போன்று உள்ள போலியான ஏடிஎம் கார்டு ஒன்றை சண்முகம் கையில் கொடுத்துள்ளனர்.

Image result for போலி ATM கார்டு

வீட்டிற்கு செல்லும் வழியில் ஏடிஎம் கார்டை கவனித்த சண்முகம் இது தனது கார்டு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியானார். உடனடியாக atm மையத்திற்கு சென்ற சண்முகம் அங்கே நின்று கொண்டிருந்த மூவரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சங்ககிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் இருந்து 10 போலியான ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |