தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.