அங்கன்வாடியில் பல்லி விழுந்த சாப்பாட்டை அருந்திய குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் கொண்டு வந்து அங்கே விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மத்திய உணவுக்காக குழந்தைகளுக்கு ஊழியர்கள் சாப்பாட்டை பரிமாறிய போது அதில் பல்லி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னே உணவுகளை சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளனர்.
இதனையடுத்து ஊழியர்கள் குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு மருத்துவர்கள் மூலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை பார்வையிட்டு அவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்து குழந்தைகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்கும் படி அங்கிருந்த மருத்துவர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.