Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூறையாட வாடா’… தெறிக்கவிடும் ‘மகான்’ பட முதல் பாடல்…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தற்போது மகான் திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த  படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது .

சமீபத்தில் இந்த படத்திலிருந்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘சூறையாட்டம்’ என்கிற இந்த அதிரடியான பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

Categories

Tech |