சட்டவிரோத செயலை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மனகாவலன் பிள்ளை நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் 4 பேர் சட்ட விரோதமாக சூதாடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து 4 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரத்து 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.