Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்…..!!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்த்தில் தலமரகன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி அன்று நாகலிங்க தலமரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களிடம் கூறியதாவது, பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 1,00,000 மரக்கன்றுகளை திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் அந்தந்த தல மரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல்,சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா மற்றும் மகிழம் ஆகிய மரங்கள் நடப்பட்டு அதனை பராமரிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்றும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மூங்கில் மரத்தை இசைஞானம் வளரும் என்றும், மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் கூறினார்.

Categories

Tech |