Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மேற்கு பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டில் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 9 கிராம் தங்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை போல் கதிரேசன் என்பவர் வீட்டிலும் கொலுசு மற்றும் டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்போல் சக்திவேல் என்பவர் வீட்டிலும் 88 கிராம் தங்கமும், பூராசாமி என்பவர் வீட்டிலும் 3 பவுன் தங்க நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால் கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த கொள்ளை கும்பலை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்குகள் சம்பந்தமாக 4 பேர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் ரகு, அன்பரசன், பரமசிவம், ராஜசெல்வம் ஆகியோர் இணைந்து வீடுகளில் கொள்ளை அடித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 360 கிராம் வெள்ளி, டிவி மற்றும் 77 கிராம் தங்கம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |