பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த வாரம் 2 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சில நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது. இதனையடுத்து மேலும் அசம்பாவித சம்பவம் நடப்பதை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் காவல்நிலையத்தில் கபிலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கோபாலசமுத்திரம் பகுதியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த சக காவல்துறையினர் கபிலனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.