பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் மருத்துவரான கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்ஜினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் மகன் இருக்கின்றான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சஞ்ஜினி தனது மகனுடன் சேர்ந்து தாத்தாவான கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ஹோட்டலில் வைத்து சஞ்ஜினி தனது மகனுக்கு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளார்.
அப்போது அந்த விழாவில் பங்கேற்ற உறவினர்கள் கோகுல் குறித்து கேட்டதால் மன உளைச்சலில் இருந்த சஞ்ஜினி தனது குழந்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து நீண்ட நேரமாகியும் தனது அறையை விட்டு வெளியே வராததால் கோவிந்தராஜ் அங்கு சென்று பார்த்த போது தனது பேத்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்ஜினியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.