கல்லூரி மாணவனுக்கு சினிமா ஆசை காட்டி ரூ1,20,000 பணத்தை தந்தை , மகன் இருவரும் சேர்ந்து சுவாகா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ் எஸ் கண்ணன். இவர் சென்ற வருடம் நம்ம கதை என்ற தலைப்பில் தனது மகன் கவித்திறன், நிகாவித்திறன் ஆகியோரை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். அந்தப்படம் திரையரங்கில் ஓரிரு நாட்களே ஓடிய நிலையில் ரூட் பொருள் போன்ற அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் அதிலும் தன் மகன்தான் ஹீரோவா நடிக்கப் போகிறார் என்றும் விளம்பரங்களை தாறுமாறாக செய்துவந்தார்.
மேலும் ஓடாத படத்தின் கதாநாயகனாக இருந்த கவித்திறனை சேப்பாக்கத்தில் சுற்றியுள்ள ஒரிரு கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்தும் கூத்துக்கள் நடைபெற்று உள்ளன. இந்நிலையில் கவித்திறனின் இரண்டாவது மகன் நிகாவித்திறன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களுக்கு சினிமா ஆசையை தூண்டி விட்டு பணம் கொடுத்தால் தான் இயக்கும் இரண்டு படங்களிலும் உங்களுக்கு முக்கிய கதாபாத்திரம் அளிப்பதாக எஸ்எஸ் கண்ணன் நம்பிக்கை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பி மூர்த்தி என்கிற மாணவன் தனது பகுதி நேர வேலையில் சேர்த்து வைத்த ரூபாய் ஒரு லட்சத்தி இருபதாயிரம் பணத்தை அப்படியே மூர்த்தியிடம் கொடுத்துள்ளார். இந்த பணம் அவரது கல்லூரி படிப்பின் இரண்டாவது ஆண்டு கட்டண தொகையாகும். பணம் செலுத்தி ஆறு மாத காலத்தை கடந்த நிலையில் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த மூர்த்தி கண்ணனிடம் தனது பணத்தை திருப்பித் தருமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தன்னை இப்படியே தொந்தரவு செய்தால் எனது மற்றொரு முகத்தை காட்ட வேண்டியது இருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்க மாவட்ட செயலாளர் எஸ் எஸ் கண்ணன் மற்றும் அவரது மகன் கவித்திறன் ஆகியோரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் தலைமறைவான கல்லூரி மாணவன் நிகாவித்திறனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.