1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு 3 மாத பெண் குழந்தையை தம்பதிகள் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீனாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் பெண் குழந்தையை ஒருவருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் விசாரணை நடத்திய போது குழந்தை விற்கப்பட்டது உறுதியானது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன் மீனா தம்பதியினர் யாரிடம் குழந்தையை விற்பனை செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.