Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியின் நினைவு தினத்தில்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் விவசாயியான ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சொர்ணம் உயிரிழந்ததால் ஜான் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சொர்ணத்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்களது மகன் ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த ஜான் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதன் பின் வீட்டிற்கு வந்த மகன் தனது தந்தை தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜானின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |