தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் ரூபாய் 10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், கடைபிடிக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.