தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எதையெல்லாம் சேர்க்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.