நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் நாட்டுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டு தங்களது நாட்டிற்கு சென்றதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுடன் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடனான தொடரை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கடைசி நிமிடத்தில் தங்கள் நாட்டுடன் விளையாடாமல் திரும்பி சென்றதற்கு இந்தியாவிலிருந்து அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலே காரணம் என்று தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி இந்தியாவிலிருந்து இணையத்தின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் சிங்கப்பூரிலிருந்து கொடுக்கப்பட்டது போன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.