Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. விரைவில் மாறப்போகும் பாடத்திட்டம்?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் உருவாக்கியுள்ளது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டங்களை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறப்பு குழுவில் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் சிங், இஸ்லாமிய பல்கலைக் கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய கல்வி கொள்கை 2020இல் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாடத்திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட ஆலோசிக்கப்படும். அது எந்த அளவு சாத்தியம் ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் தமிழக அரசு இதில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

Categories

Tech |