Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மது குடித்த வினோத்…. கீழே விழுந்ததால் விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வினோத் மது அருந்திவிட்டு வீட்டின் தரையில் படுத்து உறங்கியுள்ளார்.

இதனையடுத்து வினோத் வீட்டில் உள்ள கட்டிலில் படுப்பதற்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது வினோத் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனால் வினோதை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினோத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |