ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப் படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கான உத்தரவை நிதித்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன் படி ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 5% உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும், அனைத்து பொதுத்துறை, உள்ளாட்சித் துறை ஓய்வூதியம் பெறுவோர்க்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.