ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் ஆத்மகுறு நகரைச் சேர்ந்த பெஞ்சலையா என்பவருக்கும், கோட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொண்டம்மா என்பருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். பெஞ்சலைய்யா ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனைவி கொண்டம்மா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி பெஞ்சலைய்யா சண்டையிட்டு வந்துள்ளார்.
அதன்படி தம்பதியிடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கொண்டம்மா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பெஞ்சலைய்யா , தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து மகிழ்ச்சியடைந்தார். கணவன் கண் எதிரிலேயே கொண்டம்மா தூக்கில் தொங்கியபடி துடி துடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.