Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி இறப்பில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

4 மாத கர்ப்பிணி பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கானூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்பநகர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா வீட்டுக் குளியலறையில் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் வனிதா இறப்பு குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் சடலத்தை கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்சை வழிமறித்து இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்சை விடுவித்தனர். இதனையடுத்து வனிதாவின் சடலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனைக்கு திரண்ட 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் வனிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தக்கோரி அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களில் சிலரை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வேனில் ஏற்ற முயற்சி செய்தனர்.

இதன் காரணமாக வேதனையும் முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வினிதாவின் உறவினர்கள் கூறியபோது திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டனர். அதில் 10 பவுன் நகை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக 10 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் கேட்டு அவர்கள் வலியுறுத்தி வந்ததால் வனிதா தற்கொலை செய்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வனிதாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். இதற்கு காவல்துறையினர் வனிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |