டெய்லர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க நகரில் டெய்லரான ஆதிகுமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி இருக்கிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து ஆதிகுமரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்திலிருந்து விலகி தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 21 – ஆம் தேதியன்று இந்நகர் தெப்பம் பகுதியில் ஆதி குமரன் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆதிகுமரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆதிகுமரனின் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஆதி குமாரின் உடலை மீட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.