கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி திருப்பதி நகரில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு காய்கறிகளை வாங்குவதற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் இவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முனியாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் முனியாண்டிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து குறித்து முனியாண்டியின் மகனான வீரமணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்மன்கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் கிரேன் டிரைவரான விக்னேஷ்பாண்டியன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.