ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்பட வாய்ப்புள்ள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த 15ஆம் தேதி முதல் தலிபான்களின் கையில் சென்றது.மேலும் அவர்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அமல்படுத்தியுள்ளனர். அதில் இஸ்லாம் மத கொள்கைகளை விரிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் ஏற்படுத்தியுள்ள புதிய அரசில் இருக்கும் அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் பார்வையிடவும் தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதேபோன்று ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பவும் தலிபான்கள் அனுமதி மறுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்கள் பொது இடங்களுக்கு செல்லவோ கல்வி கற்கவோ வேலைக்கு செல்லவோ கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் அனைவரையும் அடக்கிய அரசை ஏற்படுத்தவில்லை என்றால் விரைவில் அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படலாம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அவ்வாறு உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் மனிதாபிமான மற்றும் அகதிகள் முதலில் பாதிக்கப்படுவார்கள் மேலும் ஆயுத கும்பல்கள் ஆப்கானிஸ்தானில் ஆயுதமாக பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவார்கள். அவ்வாறு நடந்தால் அங்கு குழப்பமான சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.