Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே விரைவாக…. செயல்படும் அரசு தமிழக அரசு தான்…. முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னையில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசுதான். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது. விவசாயிகளுக்கான ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் மிகவும் மகத்தானது என்று முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |