Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடிந்து விழும் அபாய நிலை…. புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பழுதடைந்து காணப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றகோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அத்தப்பம்பாளையம் பகுதியில் கடந்த 31 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட  தண்ணீர் தொட்டி சேதமடைந்தது காணப்படுவதால் நீர் நிரப்புவது நிறுத்தப்பட்டது. இதனால் புதிதாக கருப்பணன் கோவிலில் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. ஆனால் சேதமடைந்த தொட்டி அகற்றப்படாமல் இருப்பதால் கான்கிரீட் சுவர்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.

மேலும் பல இடத்தில் கீறல் விழுந்து தொட்டியானது இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பயனின்றி உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றகோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |