தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், 40 ஆயிரம் முகாம்கள் மூலமாக 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்துவதற்கும், சுகாதாரத் துறை முடிவு செய்து 2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் மையங்களில் “மெகா தடுப்பூசி” முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.