பட்டப்பகலில் பெண்ணிடமிருந்து கைபேசியை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் கணேசன் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜகோபால் நகரில் வசிக்கும் சூர்யா என்ற வாலிபர் முத்துலட்சுமியின் கைபேசியை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து முத்துலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் சூர்யாவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கைபேசியை பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் ஒப்படைத்து விட்டனர்.