இனி தேவையற்ற போர்களில் ஈடுபட போவதில்லை என்று அமெரிக்கா அதிபர் ஐ.நா.பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுக்கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அதில் “உலகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போர் போன்ற வன்முறையினால் முடிவு காண இயலாது.
மேலும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்ற வேண்டிய தேவை இருந்தால் அப்பொழுதும் வேறுவழியில்லை என்றால் தான் போரானது நடத்தப்படும். இதனையடுத்து எந்தவொரு நாட்டுடனும் இனி பனிப்போர் புரிய போவதில்லை. குறிப்பாக அமைதியை நிலைநாட்டுவதற்காக எந்த நாட்டுடனும் இணைந்து செயல்பட தயார் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை வெடி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி அளிக்க முடியாது.
அதற்கு அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த அறிவே தேவை என்றும் கூறியுள்ளார். குறிப்பாக பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து அளிக்கும் நிதியானது இனிமேல் அதிகரிக்கப்படும். இது மட்டுமின்றி இதுவரை 160 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா தொற்று பரவலை சமாளிப்பதற்காக உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு 15 பில்லியனுக்கும் மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது” என்று உரையாற்றியுள்ளார்.