Categories
மாநில செய்திகள்

சென்னை- குருவாயூர் விரைவு ரயில் சேவைகள்…. வரும் 25ம் தேதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.  அதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது . அதன் பின்னர் ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்னர் சரக்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு ரயில் சேவை என படிப்படியாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதன்பிறகு முன்பதிவு இல்லாத பாசஞ்சர் ரயில்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் இதனை அடுத்து தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு வந்துள்ளது.  அதே நேரத்தில் சிறப்பு ரயில்களின் சேவை முழுவதுமாக நிறுத்தபடாமல் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வழித்தடங்களில்  இயக்கப்பட்டு வருகிறது .  இந்த நிலையில் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி  02606 என்ற  எண்ணை  கொண்டுள்ள காரைக்குடி- சென்னை எழும்பூர் மற்றும் 12635 என்ற எண்ணை   கொண்டுள்ள சென்னை எழும்பூர்-மதுரை இடையிலான சிறப்பு ரயில்கள் பராமரிப்பு பணிகளின் காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் இடையே வரும் 29 ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் தற்போது பணிகள் முடிவடைந்ததால் மேற்குறிப்பிட்ட இரண்டு ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து 06627 என்ற எண்ணைக் கொண்ட சென்னை-சென்ட்ரல் மங்களூர் சிறப்பு ரயில் வரும் 28ஆம் தேதி சென்ட்ரல் மற்றும் ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த ரயிலும் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது அதனை தொடர்ந்து மேலும்  03351 என்ற எண் கொண்ட தன்பாத்- ஆலப்புலா சிறப்பு ரயில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் நிற்காது என்று கூறபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி 06127 என்ற எண் கொண்ட  சென்னை- குருவாயூர் விரைவு ரயில் சேவைகள் சில பராமரிப்பு பணிகளின் காரணமாக  கொல்லம்- குருவாயூர் இடையே ரத்து செய்யப்படும்.  அதனால் பயணிகள் அனைவரும், இதற்கு தகுந்தவாறு பயணம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்கள்  .

Categories

Tech |