Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்…. மீண்டும் இயங்கும்…!!!

பகுதி வாரியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர் -காரைக்குடி எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் இயக்கப்படும்.  இதுகுறித்து  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் , பராமரிப்பு பணியின் காரணமாக செப்டம்பர் மாதம் 22 மற்றும் 29 ஆகிய  தேதிகளில் சென்னை எழும்பூர்-காரைக்குடி ரயில் எண் (02635) காரைக்குடி-எழும்பூர் (02606),எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பராமரிப்பு பணியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டடுள்ளதால் மேற்கண்ட நாட்களில்  ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட எழும்பூர் -காரைக்குடி (02635) மற்றும் காரைக்குடி எழும்பூர் (02606) எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து இல்லாமல்  எழும்பூர் ரயில் நிலையத்திலியத்திலிருந்து வழக்கம்போல்  இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |