Categories
உலக செய்திகள்

மிதமான நிலநடுக்கம்…. ரிக்டரில் 3.9 ஆக பதிவு…. புவியியல் மையத்தின் அறிவிப்பு….!!

அந்தமான் தலைநகரில் ரிக்டர் அளவில் 3.9 ஆக மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் என்னும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் மைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கமானது அந்தப் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |