Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!!

தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை ஏடிஜிபி ஆக இருந்து வந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடி.ஜி.பி.யாக இருந்த அபய்குமார் சிங் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி ஆக இருந்த கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி ஆக ஐபிஎஸ் அதிகாரி நிஷா நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேந்திர குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி ஆக சரவண சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை (பொது) பிரிவு ஐ.ஜி.யாக ராதிகா, சேலம் நகர துணை ஆணையராக மாடசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Categories

Tech |