Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : வெற்றியை தொடருமா கொல்கத்தா ….? மும்பை VS கொல்கத்தா இன்று மோதல் ….!!!

14வது ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

14 வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 4-ல் வெற்றி ,4 தோல்வி என 8 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது .இந்நிலையில் துபாயில் நடந்த சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால் அன்றைய போட்டியில் கேப்டனாக பொல்லார்ட் பொறுப்பேற்றார்.

அதேபோல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இருவரும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி ,    5 தோல்வியுடன் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியிலும் அதே உத்வேகத்துடன் களமிறங்க காத்திருக்கிறது .இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

Categories

Tech |