ஹரி மேகன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் அரண்மனை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா இளவரசரான ஹரி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அரண்மனை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஹரி அவரது மனைவியான மேகன் மற்றும் இரு குழந்தைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அரண்மனை அழைத்து வர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு ஹரி மேகன் தம்பதியினர் பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினர். அதன் பின்னர் இருவரும் வெளியேறியதை அடுத்து இரண்டு வருடங்களாக ஹரி மட்டும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக அரண்மனை வந்தார். ஆனால் அவருடன் ஹரியின் மனைவி மற்றும் குழந்தைகள் வரவில்லை. ஆனால் இம்முறை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மூன்று மாத குழந்தையான லிலிபெட் முதல் முறையாக பிரித்தானியா வருகிறாள். இதனால் மகாராணியார் தன் பேத்தியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனை தான் அவரும் விரும்புகிறார். மேலும் இளவரசர் சார்லஸ் கூட தன் பேரக் குழந்தைகளை சந்திக்க ஆவலாக உள்ளார். ஆகவே இந்த சந்திப்பானது குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய உதவும்” என்று தெரிவித்துள்ளார்.