நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்துள்ளனர்.
நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரை படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் திரை படம் வெற்றிபெற வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் திருகோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த சமயத்தில், விஜய் ரசிகர்கள் பிகில் படம் வெற்றி பெற வேண்டியும்,
விஜய் நீண்ட காலம் வாழ வேண்டியும் அர்ச்சனை செய்தனர். இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க தலைவர் குட்டி கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள், கோவில் வளாகத்தின் தரையில் உட்கார்ந்து மண்சோறு உண்டு பிரார்த்தனை செய்தனர். இதுகுறித்துப் ரசிகர்கள் பேசுகையில், விஜய் அண்ணா நீண்ட காலம் வாழ வேண்டும் மென்மேலும் சினிமா துறையில் வளர வேண்டும், என்றும் பிகில் திரை படத்தை காண மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.