வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்லும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இன்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியானது நடைபெற உள்ளதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை போன்றவை மூடப்படுகிறது. மேலும் அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.