சட்டவிரோதமாக ஏரியில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் ஊராட்சி நாகல் ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஏரியில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த குமார், இளவரசன், சரவணன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.