அழகியை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் கிராமத்தில் 30 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் வாட்சப் எண்ணிற்கு அழகிகளின் புகைப்படங்கள் வந்ததோடு, பணம் கொடுத்தால் ஹோட்டல் அறையில் அழகிகளுடன் தனிமையில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த வாலிபர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரான விக்னேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பிறகு நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகியை காவல் துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.