இந்தியா சென்று திரும்பிய சிஐஏ அதிகாரி ஒருவருக்கு மர்ம நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கு ஹவானா தொற்றுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த மாதம் இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு ஹவானா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் அறிந்த அமெரிக்கா அரசும் வில்லியம் பரன்ஸ்ஸும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நோய்த் தொற்றானது எவ்வாறு பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்க மற்றும் கனடா தூதரகங்களை சேர்ந்தவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மர்ம நோயின் அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்பட்டன. மேலும் அதற்கு ஹவானா என்று பெயரிட்டனர். இதனையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை சேர்ந்த தூதர்களுக்கும் இந்த நோய்த் தொற்றானது காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரஷ்யாவின் ரகசிய நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த சிஐஏ அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளின் உளவுத்துறை அதிகாரிகளிடமும் ஹவானா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் மூளையில் காயம் ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகளும் தோன்றுவதாக கூறப்படுகிறது.
இந்த நோய்த் தொற்றானது ஒளி மின் காந்தம் போன்ற மின் அலைகள் பயன்படுத்தி ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. குறிப்பாக இந்தியா வந்து சென்ற சிஐஏ அதிகாரியிடம் எவ்வாறு இந்த தொற்றானது பரவியது என்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.