திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த உஸ்மான் (75) என்பவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் உஸ்மானுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.