லாரி மோதிய விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிழக்கு வீதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி என்ற மகள் இருந்தார். இவர் சித்தோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தாரணி தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக தாரணி மீது மோதியது.
இதனால் படுகாயமடைந்த தாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாரணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.