வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூசும்மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று இரண்டு குட்டிகளுடன் உலா வருகிறது. மேலும் இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் நாய்கள் மற்றும் மாடுகளை கடித்ததாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டிரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை இந்த பகுதியில் பொதுமக்கள் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். எனவே எந்த பகுதியில் சிறுத்தை நடமாடுகிறது என்பதை டிரோன் கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.