Categories
தேசிய செய்திகள்

25 ஆண்டுக்கான தணிக்கையிலிருந்து…. விலக்கு அளிக்க முடியாது…. அதிரடி தீர்ப்பு….!!!

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ் பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோயில் அறக்கட்டளையின் கணக்குகளை கடந்த 15 ஆண்டுகளாக தணிக்கை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கோயில் அறக்கட்டளையின் சார்பில் அதற்கு விலக்கு அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 17-ந்தேதி விசாரித்தது.

அதன் பின் நேற்று அவ்வழக்கில் அளித்த தீர்ப்பு பின்வருமாறு,” கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை போன்று கடந்த 25 ஆண்டுக்கான  தணிக்கையையிலிருந்து கோவில் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆனது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.மூன்று மாதங்களுக்குள் கோவில் அறக்கட்டளையின் கணக்குகளை விரைவாக சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும் என உத்தரவிடுகின்றோம். மேலும் இரண்டாவது கோரிக்கையான கோவில் அறக்கட்டளையை  சுதந்திரமான தனித்துவமான அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு உரிய  நீதிமன்றமே முடிவெடுப்பதற்கு விட்டுவிடுவதாகவும், அதற்கு கருத்து எதும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Categories

Tech |