வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.