வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரியாகுளம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் மீது ராதாபுரம் திசையன்விளை காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் காவல்துறையினர் கண்ணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து கண்ணனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கண்ணனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.