புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை உதவி இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அங்கிருந்து அரக்கோணம் உள்பட 4 பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றது. அதன்பின் காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்கின்ற பேருந்துகள் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பேருந்து நிலையத்தை புதுப்பிக்க காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் முடிவு செய்திருந்தனர்.
இதனை 3 கோடி மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதியதாக பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கிய நிலையில் தற்போது பணிகளும் முடிவடைந்து உள்ளது. இதனையடுத்து பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு மேடை, உணவகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, நடைமேடைகள், சைக்கிள் நிறுத்தம், வைபை வசதி அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கிறது.
இதனை விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கொண்டுவரப்பட இருக்கின்றனர். இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தை பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இளங்கோவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் 15-வது வார்டு கட்டளை பாட்டை தெருவில் நடைபெற்று வருகின்ற மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.