ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் ,மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .
14வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லி படர்பூரில் உள்ள மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள பிளாட்டில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் ,அஹ்சன், சுனித் குமார் சின்ஹா உட்பட 5 பேரை கைது செய்தனர் .
மேலும் அவர்களிடமிருந்து 2 லேப்டாப் ,13 மொபைல் போன் ,ஒரு டிவி மற்றும் ரூபாய் 52 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் சூதாட்டத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.