Categories
சினிமா தமிழ் சினிமா

நா கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி… ‘வலிமை’ படத்தின் வேற லெவல் வீடியோ…!!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. மேலும் இந்த படம் வருகிற 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் அதிரடியான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |