பிகில் பட வழக்கில் கதை தொடர்பாக காப்புரிமை வழக்கு தொடர துணை இயக்குனர் கேபி செல்வா_வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிகில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் கேபி செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அது மட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடமாகவே அட்லி தரப்பினரோடு பேச்சு வார்த்தையும் , போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். இந்த வழக்கு பிரச்சனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி உள்ளது. அட்லீ தரப்போடு கே.பி செல்வா பேச்சுவார்த்தை நடத்தினார் , எழுத்தாளர் சங்கத்தை அணுகியும் உடன்பாடு கிடைக்காத நிலையில சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அட்லி இயக்கத்தின் கதை என்னுடையது , என்னுடைய மையக் கருவை எடுத்து தான் அதில் சில மாற்றங்களை செய்து திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று அவர் தரப்பில் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கான விசாரணை நடைபெற்றபோது அட்லி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கை இங்கே விசாரிக்க முடியாது உயர்நீதி மன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து துணை இயக்குனர் கே.பி செல்வா இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தான் இருக்கேன் அதனால் எனது மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தார். அவரின் கிரிக்கையை ஏற்ற சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியும் கே.பி செல்வாவின் மனுவை தள்ளுபடி செய்தார்கள்.இந்த நிலையில்தான் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்தது. ஆனால் அட்லி தரப்பில் ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் இது விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கூடாது என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர துணை இயக்குனர் கேபி. செல்வாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பிகில் திரைப்படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டு அப்படிதான் சொல்லனும். வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் இந்த நிலையில் இன்னும் 2 நாள்தான் இருக்கு இந்த நிலையில் கதை தொடர்பான விசாரணை நடைபெறுவதால் படம் வெளியாவது சிக்கல் என்பது உறுதியாகியுள்ளது.மேலும் இந்த படம் வெளியாக வேண்டும் இதன் கதை கேபி. செல்வா உடையது என்று போட வேண்டும் என்று துணை இயக்குனர் செல்வா தரப்பு கோரிக்கையாக இருக்கின்றது.