‘தளபதி 66’ படத்தின் பூஜை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரது 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.